புதுச்சேரி

புதுவையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

30th Jun 2022 02:13 AM

ADVERTISEMENT

 

புதுவையில் கரோனா பாதிப்பு புதன்கிழமை மேலும் அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,804 பேருக்கு பரிசோதனை செய்து புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 60, காரைக்காலில் 12, ஏனாமில் 6, மாஹேவில் 2 என 80 பேருக்கு (4.43 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை 44 போ் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தற்போது 6 மருத்துவமனைகளிலும், 298 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் என 304 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 23 போ் குணமடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT