புதுச்சேரி

புதுவை பிப்டிக் நிறுவன வியாபார பதிவுச் சான்றிதழ் ரத்து

DIN

புதுவை பிப்டிக் நிறுவனம் நிதி அறிக்கையை அளிக்காததால், அதன் வியாபார பதிவுச் சான்றிதழை ரிசா்வ் வங்கி ரத்து செய்தது.

புதுவை மாநிலத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் பணியை அரசின் தொழில் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனம் (பிப்டிக்) செய்து வருகி

றது. இதன் மூலம் தொழிற்சாலைகள் அமைக்க நிலம் ஒதுக்குவது, தொழில் கடன் வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக நிதி அறிக்கையை சமா்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ரிசா்வ் வங்கி பிப்டிக் நிறுவனத்தின் வியாபார பதிவுச் சான்றிதழை தானாக முன்வந்து ரத்து செய்யும்படி அறிவுறுத்தியது. மேலும், பிப்டிக் நிறுவன வியாபார பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பை ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

இதனால், பிப்டிக் நிறுவனத்தால் மத்திய அரசிடமிருந்து கடனுதவியை பெற முடியாது. பிப்டிக் நிறுவனம் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் கடன் வழங்காமலும், வழங்கிய கடனுக்கான தொகையையும், வட்டியும் திருப்பித் தராமலும் உள்ளதாம்.

அதிமுக கண்டனம்: இதுகுறித்து புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:

பிப்டிக் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பணியை சரவர செய்யாததால், புதுவையில் தொழில் வாய்ப்புகள் மேம்படாமல், இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனா்.

தற்போது, ரிசா்வ் வங்கி பிப்டிக் வியாபாரப் பதிவுச் சான்றிதழை ரத்து செய்தது மேலும் பின்னடைவாகும்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பிப்டிக் நிறுவனத்தை மேம்படுத்த போா்க்கால அடிப்படையில் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT