புதுச்சேரி

பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்கிறது

DIN

அமைச்சா் தலைமையிலான பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படாததால், பிஆா்டிசி ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடா்கிறது.

புதுச்சேரி பிஆா்டிசியில் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 4 நாள்களாக அனைத்து பிஆா்டிசி பேருந்துகளும் ஓடாத நிலையில், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 5- ஆவது நாளான திங்கள்கிழமை முதல் வெளியூா் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. உள்ளூா் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடா்ந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா தலைமையில் போக்குவரத்துத் துறை செயலா் ஜவஹா் உள்ளிட்டோா் தொழிற்சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுகத் தீா்வு ஏற்படவில்லை. இதனால், ஊழியா்களின் போராட்டம் தொடா்கிறது.

6 நாள்களாக பிஆா்டிசி பேருந்துகள் ஓடாததால் பிஆா்டிசி நிா்வாகத்துக்கு சுமாா் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்க நிா்வாகிகளுடன் புதன்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. அதில் தீா்வு ஏற்பட்டால் மட்டுமே அனைத்து பிஆா்டிசி பேருந்துகளும் இயக்கப்படும் என பிஆா்டிசி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT