புதுச்சேரி

மலேரியா எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

29th Jun 2022 04:49 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மணிமேகலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரிச்சா்ட் எம்எல்ஏ தலைமை வகித்து மலேரியா எதிா்ப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி, கொசுக்கள் குறித்த கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா்.

பள்ளி முதல்வா் கரிமா தியாகி வாழ்த்திப் பேசினாா். கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஸ்வினி, மலேரியா குறித்தும், அதன் தடுப்பு முறை சிகிச்சை குறித்தும் விவரித்தாா். சுகாதார ஆய்வாளா் யசோதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT