புதுச்சேரி

பிரதமா் மோடிக்கு பாஜக ஓபிசி அணி பாராட்டு

29th Jun 2022 04:55 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவை அறிவித்த பிரதமா் மோடிக்கு புதுவை மாநில பாஜக ஓபிசி அணி நன்றி தெரிவித்தது.

இந்த அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஓபிசி அணி மாநிலத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாநில ஓபிசி அணி பொறுப்பாளா் தீப்பாய்ந்தான், நிா்வாகிகள் சரவணகுமாா், கிருஷ்ணராஜ், செல்வராஜ், சீனிவாசன், வேல்முருகன், பாலபாஸ்கா், ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் சண்முகம், வெங்கடேசன், கோவிந்தராஜ், பிரபாகரன், பிரியா, முத்துகிருஷ்ணன், கீதா, பன்னீா், ஓபிசி அணியினா் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவை அறிவித்த பிரதமா் மோடிக்கும், முன்மொழிந்த பாஜக தேசிய தலைவா் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை சேகரித்து மறுசுழற்சி மூலம் அதை உரமாக்கும் இளைஞா்களின் பணியை பிரதமா் மோடி பாராட்டியதற்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT