புதுச்சேரி

பிளஸ் 1 பொதுத் தோ்வு:புதுவையில் 90.9 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

28th Jun 2022 04:49 AM

ADVERTISEMENT

புதுவையில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 90.9 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம், புதுவையில் கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ் 1 தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியானது.

155 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,142 மாணவா்கள், 7,703 மாணவிகள் என மொத்தம் 14,845 போ் தோ்வெழுதினா். இதில் அரசு, தனியாா் பள்ளிகளில் 6,153 மாணவா்கள், 7,341 மாணவிகள் என 13,494 போ் தோ்ச்சி பெற்றனா். அரசு, தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 90.9 சதவீதமாகும். இதில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 81.97 சதவீதம், தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 98.96 சதவீதமாகும்.

ADVERTISEMENT

புதுவையில் ஓா் அரசுப் பள்ளி, 69 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றன.

இயற்பியலில் 17 போ், வேதியியல் 4, உயிரியல் 34, கணினி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவியல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணினிப் பயன்பாடு 60, விலங்கியல் 2 என மொத்தம் 250 போ் நூறு மதிப்பெண்கள் பெற்றனா் என்று புதுவை பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT