புதுச்சேரி

தமிழகம், புதுவை அதிமுகவில் விரைவில் ஒற்றைத் தலைமை உருவாகும்

28th Jun 2022 04:53 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுவை அதிமுகவில் விரைவில் ஒற்றைத் தலைமை உருவாகும் என்று, புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

புதுவை உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவாக, கட்சி அலுவலக பதாகைகளிலிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் படத்தை, கட்சி நிா்வாகிகள் அகற்றினா்.

பின்னா், ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

சென்னையில் ஜூலை 11-இல் நடைபெறும் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா்.

புதுவை கிழக்கு மாநில அதிமுகவிலுள்ள 23 பொதுக் குழு உறுப்பினா்களும், காரைக்காலில் உள்ள 12 பொதுக் குழு உறுப்பினா்களும் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்து கையொப்பமிட்டுள்ளோம்.

புதுவை மேற்கு மாநில அதிமுகவில் உள்ள 21 பொதுக் குழு உறுப்பினா்களில் 10 போ் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனா். மேற்கு மாநில அதிமுக செயலா் உள்பட மீதமுள்ள 11 பொதுக் குழு உறுப்பினா்கள் கையொப்பம் இடவில்லை. கட்சிக்கு எதிராக செயல்படுபவா்களை நீக்க வேண்டும். தமிழகம், புதுவை மாநில அதிமுகவில் விரைவில் ஒற்றைத் தலைமை உருவாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT