புதுச்சேரி

புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

28th Jun 2022 04:54 AM

ADVERTISEMENT

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT