புதுச்சேரி

மக்கள் நீதிமன்றம்: புதுச்சேரியில் 2,067 வழக்குகளுக்கு தீா்வு

28th Jun 2022 04:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,067 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான யு.யு.லலித் உத்தரவுப்படியும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான டி.ராஜா வழிகாட்டுதலின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், தலைமை நீதிபதியுமான ஜெ.செல்வநாதன் வரவேற்றாா். இதில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.குமரன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமாா் 6,500 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,067 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டு, ரூ.10.97 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

இவற்றில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1,877 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது என புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT