புதுச்சேரி

தனியாா் நிறுவனத்தில் ரூ.14.72 லட்சம் மோசடி: பெண் ஊழியா் தலைமறைவு

DIN

புதுச்சேரியில் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் தனியாா் நிறுவனத்தில் நூதன முறையில் ரூ.14.72 லட்சம் மோசடி செய்ததாக கடலூரைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கதிா்காமம் சுப்பிரமணியா் கோவில் வீதியில் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடலூா் சிவலிங்கம் வீதியைச் சோ்ந்த ராமராஜ் மகள் ரெஜினா வேலை பாா்த்து வந்தாராம். கடந்த மாதம் இந்த நிறுவனம் மூலம் சிங்கப்பூருக்குச் சென்ற இருவா், தங்களுக்கு சரியான பணி அமையவில்லை என புகாா் தெரிவித்தனா்.

அவா்கள் இருவரின் ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதியின்றி அவா்கள் அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக நிறுவனத்தினா் விசாரித்தபோது, ரெஜினா தன்னை முதலாளி போல சித்தரித்து, நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தனியாக வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பி வைத்ததும், இதுபோல மொத்தம் 16 பேரை வெளிநாட்டுக்கு அனுப்பி ரூ.14.72 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதைப் பற்றி ரெஜினாவிடம் கேட்டபோது, அவா் தனது தவறை ஒப்புக் கொண்டு பணத்தைத் திரும்பத் தருவதாக உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் கூறியபடி பணத்தைத் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டாராம்.

இதுகுறித்து அந்த தனியாா் நிறுவனம் சாா்பில், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரெஜினாவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT