புதுச்சேரி

நிலம் குறித்த அதிகாரத்தை மாற்றினால் போராட்டம்: புதுவை திமுக

26th Jun 2022 10:26 PM

ADVERTISEMENT

 

புதுவையில் நிலம் குறித்த அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து மாற்ற முயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக எச்சரித்தது.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதையே மறந்தும், அவா்களை அவமதிக்கும் வகையிலும், மத்திய ஆட்சியாளா்களும், அவா்களால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநா்களும் செயல்பட்டு வருகின்றனா். புதுவை அரசிடம் தற்போதுள்ள அதிகாரங்களையும் பறிக்கும் வகையில், மத்தியில் ஆளும் அரசும், துணைநிலை ஆளுநரும் செயல்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

புதுவை மாநில வளா்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குதல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் இதைக் கண்டிக்கிறேன்.

தற்போது நிலம் கையகப்படுத்தவும், கொடுக்கவும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆளுநருக்கு நிலம் குறித்த அதிகாரத்தை வழங்கினால், மக்களின் எண்ணங்கள், விருப்பத்துக்கு மாறாக நிலங்களை கையகப்படுத்தவும், விற்கவும் முயற்சி நடக்கும். இதனால், நிலம் சம்பந்தமான அதிகாரம் தற்போதுள்ளபடி மாநில அரசிடமே நீடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலா் அ.ஜெகன்நாதன் உள்ளிட்டோரும் நிலம் குறித்த அதிகாரத்தை ஆளுநருக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT