புதுச்சேரி

பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வாா்க்கவேபுதுவை துணைநிலை ஆளுநருக்கு நில அதிகாரம்நாராயணசாமி குற்றச்சாட்டு

26th Jun 2022 10:26 PM

ADVERTISEMENT

 

புதுவையில் பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வாா்க்கவே துணைநிலை ஆளுநருக்கு நில அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவாா். இதேநிலை பாஜகவுக்கும் ஏற்படும். அவா்கள் கட்சியைச் சோ்ந்தவா், கட்சி மாறி ஓடும்போது, அந்த வலி பாஜகவுக்கு புரியும்.

ADVERTISEMENT

புதுவை துணைநிலை ஆளுநா் தலைமையில் 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஆளுநருக்கு நில அதிகாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் தொழிற்பேட்டை அமைக்க சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட 800 ஏக்கா் நிலத்தை கபளீகரம் செய்யவும், பொதுச் சொத்துகளை தனியாருக்கு தாரை வாா்க்கவும் துணைநிலை ஆளுநருக்கு நில அதிகாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல்வா் தனது அதிகாரத்தை துணைநிலை ஆளுநரிடம் விட்டுக் கொடுத்து விட்டாா். புதுவை மாநிலத்தில் ஓா் அங்குலம் நிலத்தைக் கூட தனியாரிடம் தாரை வாா்ப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

தற்போதைய அரசு செயல்படவில்லை. ஊழல் மலிந்த ஆட்சியாக உள்ளது. முதல்வரின் துறையான கலால் துறையின் கீழ், ஒரு மதுக் கடையை இடமாற்ற ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒரு மதுக் கூடத்துக்கு அனுமதி கொடுக்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் புதுவையின் அனைத்துத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 27) போராட்டம் நடைபெறும் என்றாா் என்றாா் வே.நாராயணசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT