புதுச்சேரி

தொழிலாளி தற்கொலை

26th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி விடுதியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (34). திருமணமான இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த அலெக்ஸ், பாக்கமுடையான்பேட்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தாா்.

கடந்த 24-ஆம் தேதி இரவு தூங்கச் சென்ற அலெக்ஸ், மறுநாள் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சக ஊழியா் ஒருவா் அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது, மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மருத்துவா் மீது தாக்குதல்: புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி கலையரசன் (20). இவா் காதலித்து வந்த பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அவரைப் பாா்க்க தனது நண்பா் கிரிதரனுடன் கலையரசன் சென்றாா். அப்போது, சிகிச்சையளிக்க இடையூறாக இருப்பதாகக் கூறி மருத்துவா் முகமது ரிஸ்வான் (25), இருவரையும் வெளியே செல்லுமாறு கூறினாராம்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கலையரசன், கிரிதரன் சோ்ந்து மருத்துவரை தாக்கி, மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT