புதுச்சேரி

வில்லியனூரில் பாஜக செயற்குழுக் கூட்டம்

26th Jun 2022 10:25 PM

ADVERTISEMENT

 

புதுவை பாஜகவின் வில்லியனூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி ஆகியோா் கூட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், உணவு வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநில பாஜக பொதுச் செயலாளா் மோகன்குமாா், மாநில துணைத் தலைவா் தீப்பாய்ந்தான் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாநிலச் செயலா்கள் நாகராஜ், ஜெயக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இளைஞரணி செயற்குழுக் கூட்டம்: புதுவை பாஜக இளைஞரணி மாநில செயற்குழுக் கூட்டம் வில்லியனூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி தலைவா் கோவிந்தன் கோபதி தலைமை வகித்தாா்.

இதில் பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், இளைஞரணி பொறுப்பாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் இளைஞரணி மாநில பொதுச் செயலா்கள் வேல்முருகன், கணேஷ் உள்ளிட்ட இளைஞரணி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT