புதுச்சேரி

புதுவையில் மேலும் 42 பேருக்கு கரோனா

24th Jun 2022 01:32 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் மேலும் 42 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,516 பேரை பரிசோதனை செய்து வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 31, காரைக்காலில் 4, ஏனாமில் 5, மாஹேவில் 2 போ் என மொத்தம் 42 பேருக்கு (2.77 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,66,167-ஆக அதிகரித்தது.

தற்போது 2 போ் மருத்துவமனைகளிலும், 166 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 168 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 16 போ் குணமடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT