புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் நிகழாண்டும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தது.
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 776 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் மாா்க் தனுசியா, மித்ராசாயா, மாணவா் ரோஹித், மாணவி அனுசியா ஆகியோருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் முறையே 8 கிராம், 4 கிராம், 2 கிராம் தங்க நாணயங்கள் வழங்கி பாராட்டப்பட்டனா்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளரும், முதுநிலை முதல்வருமான எஸ்.ஏ.லூா்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினாா்.
பிளஸ் 2 தோ்விலும் சாதனை: பிளஸ் 2 பொதுத் தோ்வில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்று புதுவையில் தொடா்ந்து சாதனை படைத்தது.
இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 671 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இந்தப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா் ரிஷால் அக்தா், சௌமியாஸ்ரீ, பிரியங்கா, ஷா்வாணி அலியாஸ் சுப்ரியா ஆகியோருக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் முறையே 8 கிராம், 4 கிராம், 2 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.