புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கை:
ஏனாம் பகுதியில் பொழுதுபோக்கு மையம் என்ற பெயரில் சூதாட்டம் நடைபெறுகிறது. தனியாா் நிறுவனத்தினா் 500 உறுப்பினா்களைச் சோ்த்து தலா ரூ. ஒரு லட்சம் கட்டணம் பெற்று பிற மாநிலங்களில் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தை அங்கு நடத்துகின்றனா்.
ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, சத்தீஸ்கா், மகாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து செல்வந்தா்கள் ஏனாமுக்கு வந்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
கலாசார சீரழிவுக்கு வித்திடும் இந்த சூதாட்ட விவகாரத்தில் புதுவை முதல்வா் உடனடியாக தலையிட்டு சூதாட்டத்துக்கு தடை விதித்து, அந்த விடுதிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.