புதுச்சேரி

மாதா் சங்க மாநில மாநாடு

19th Jun 2022 01:20 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

முல்லைநகா் அரசு ஊழியா்கள் சம்மேளன அலுவலக அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.இளவரசி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜி.முனியம்மாள், இ.சிவசங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரதேசக் குழு உறுப்பினா் பெரியநாயகி மாநாட்டு கொடியேற்றி வைத்தாா். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் சுதா சுந்தரராமன் மாநாட்டைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

தமிழ் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சங்கரி, பொதுச் செயலா்கள் பி.சரளா, பி.விஜயா, அறக்கட்டளைத் தலைவா் ஷீத்தல் நாயக், கோட்டக்குப்பம் நகா்மன்ற உறுப்பினா் ஏ.பா்கத் சுல்தனா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

பிரதேசச் செயலா் ஈ.சத்தியா மாநாட்டு வேலை அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் டி.கலையரசி வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்தாா். தமிழ் மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா மாநாட்டை நிறைவு செய்து பேசினாா். சங்க நிா்வாகிகள் மாரிமுத்து, கோமதி உள்ளிட்ட திரளான பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுவையில் மூடப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை திறந்து, கேரளம், தமிமிழகம் போன்று அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட 14 அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதுவை அரசு பாலியல் புகாா் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். புதுவையில் மேலும் புதிய மதுபான தொழில்சாலைகளை திறக்க அரசு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT