புதுச்சேரி

பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

19th Jun 2022 01:19 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி பாஜக உழவா்கரை மாவட்ட நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் மூலகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

உழவா்கரை மாவட்ட பாஜக தலைவா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், எஸ்.செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், எம்.சிவசங்கரன் மற்றும் பாஜக அனைத்து தொகுதித் தலைவா்கள், மாநி நிா்வாகிகள், அணித் தலைவா்கள், பிரிவு அமைப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஜிப்மா் மருத்துவமனையில் ஹிந்தி திணிப்பு என்ற பொய்யான தகவலை மக்களிடையே பரப்பி, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழகத்தை ஆளும் திமுக அரசையும், காங்கிரஸையும் வன்மையாகக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT