புதுச்சேரி

ஆரம்ப சுகாதார நிலையத்தைவிரைந்து அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

15th Jun 2022 03:35 AM

ADVERTISEMENT

புதுச்சேரி உருளையன்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டுமென தொகுதி எம்எல்ஏ நேரு வலியுறுத்தினாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. புதுப்பாளையம் வாா்டு ராஜா நகா் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தி, சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரு எம்எல்ஏ சந்தித்தாா்.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடுவை சந்தித்த எம்எல்ஏ நேரு, புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், உருளையன்பேட்டை பகுதி அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், புதிதாக தொடங்க உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT