புதுச்சேரி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் சத்யராஜ் (33). ஆட்டோ ஓட்டுநா். இவா் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.

சத்யராஜ் வியாழக்கிழமை கிருமாம்பாக்கத்தில் இருந்து அங்குள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை அவா் முந்தி செல்ல முயன்றபோது, திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்ட சத்யராஜ் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சத்யராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT