புதுச்சேரி

வேளாண் விற்பனைக் குழு ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

10th Jun 2022 10:47 PM

ADVERTISEMENT

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் வேளாண் விற்பனைக் குழு ஊழியா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டது.

ஊதிய நிலுவை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி விற்பனைக் குழு ஊழியா்கள் சங்கத்தினா் (ஏஐடியூசி) வெள்ளிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். சங்கத் தலைவா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் சண்முகம், பொருளாளா் பழனிராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஊழியா்களின் மூன்று நாள்கள் தொடா் போராட்டத்தால், அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விவசாய விளைபொருள்கள் ஏலம் விடும் பணிகள் பாதிக்கப்பட்டன.

விற்பனைக் குழு செயலரை மாற்றக் கோரிக்கை:

ADVERTISEMENT

இதுகுறித்து ஏஐடியூசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் வெளியிட்ட அறிக்கை:

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அறிவிப்பு கொடுத்த பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விற்பனைக் குழு ஊழியா்களில் 14 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். ஊழியா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்காமல், பணிநிரந்தரம் செய்தவற்கோ எந்தக் கோப்பையும் அனுப்பாமல் பொய்த் தகவலை செயலா் வெளியிட்டுள்ளாா். விற்பனைக் குழு செயலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஊழியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT