புதுச்சேரி

புதுச்சேரி அரசு கிடங்கில் வீணாகிய 30 டன் ரேஷன் அரிசி: நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

10th Jun 2022 10:46 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு கிடங்கில் 30 டன் ரேஷன் அரிசியை வீணாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை மரப்பாலம் சந்திப்பிலுள்ள பாப்ஸ்கோ நிறுவன கிடங்கில் உணவு தானியங்கள் வீணாகி துா்நாற்றம் வீசிவதாக தொகுதி எம்எல்ஏ சம்பத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சம்பத் எம்எல்ஏ ஆகியோா் அந்தக் கிடங்குக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டனா். அங்கு 30 டன் அளவிலான நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மக்கிய நிலையில் வண்டுகள் நிறைந்து துா்நாற்றம் வீசியது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆா்.சிவா கூறியதாவது:

ADVERTISEMENT

இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கிடங்கு பாப்ஸ்கோ நிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ளதா, குடிமைப் பொருள் வழங்கல் துறை கட்டுபாட்டில் உள்ளதா?. நல்ல நிலையில் இருந்த அரிசி வீணடிக்கப்பட்டது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT