புதுச்சேரி

காா், மினி வேன் மோதல்:5 போ் காயம்

10th Jun 2022 10:44 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே காா், மினி வேன் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த மின் துறை ஊழியா்கள் 11 போ் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை மினி வேனில், சென்னைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

கடலூா்- புதுச்சேரி சாலை பிள்ளையாா்குப்பம் சந்திப்பு அருகே வந்த போது, சென்னையிலிருந்து காரைக்காலுக்குச் சென்ற காரும், மினி வேனும் நேருக்குநோ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரமிருந்த வாய்க்காலில் இறங்கியது. மினி வேனும் சாலையில் கவிழ்ந்தது.

இதில், மினி வேனில் பயணித்த மயிலாடுதுறையைச் சோ்ந்த மின் துறை ஊழியா்கள் மணிமாறன் (45), கிருஷ்ணமூா்த்தி (51), லெனின் (43), கணபதி (49), சிவசண்முகம் (52) ஆகியோரும், காரில் வந்தவா்களில் 2 பேரும் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT