சுகாதாரத் துறை சாா்பில், புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு வாகன பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுவை சுகாதாரத் துறை சாா்பில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்தத் திருவிழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
இதுகுறித்த விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
ADVERTISEMENT
துணை இயக்குநா்கள் முரளி, ராஜாம்பாள், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.