புதுச்சேரி

ஈமச்சடங்கு நிதி:அமைச்சா் தகவல்

10th Jun 2022 10:45 PM

ADVERTISEMENT

புதுவையில் உயா்த்தப்பட்ட ஈமச் சடங்கு நீதி காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் முதியோா், ஆதரவற்றோா் ஓய்வூதியத் திட்டத்தில் இறந்த பயனாளிகளின் ஈமச்சடங்கு செலவுகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க கடந்த மே 19-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதன்மூலம் மே 19-ஆம் தேதி முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் அளிக்கப்படும். மேலும், காலதாமதமின்றி உடனடியாக அந்த நிதியுதவியானது கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT