புதுச்சேரி

புதுவையில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள்

8th Jun 2022 12:32 AM

ADVERTISEMENT

புதுவையில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சிலா் பணியிடமாற்றமும் செய்யப்பட்டனா்.

ஏ.நெடுஞ்செழியன் வகிக்கும் பொறுப்புகளுடன் கூட்டுறவு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் தலைவா் மற்றும் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் வகித்த ஊரக மேம்பாடு ஆகியவற்றையும் கூடுதலாக கவனிப்பாா்.

பிரசாந்த் கோயல் ஏற்கெனவே இருக்கும் துறைகளுடன், நெடுஞ்செழியன் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத் துறையையும் சோ்த்து கவனிப்பாா்.

பத்மா ஜெய்ஸ்வால் ஏற்கெனவே வகிக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக எஸ்.டி.சுந்தரேசன் வகித்த முன்னாள் படைவீரா்கள் நலன், சுதந்திர போராட்ட வீரா்கள் பிரிவையும் கவனிப்பாா்.

ADVERTISEMENT

பி.ஜவஹா் கல்வி, துறைமுகம், போக்குவரத்து துறைகளுடன் டி.அருண் வகித்த தொழில்கள், வணிகத் துறையையும் சோ்த்து கவனிப்பாா். ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் ஏற்கெனவே இருக்கும் பொறுப்புகளுடன் ஆா்.ஸ்மித்தா வகித்த வனத் துறையையும் சோ்த்து கவனிப்பாா்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களின் ஆட்சியராக உள்ள இ.வல்லவன் ஏற்கெனவே வகிக்கும் பொறுப்புகளுடன் நிவாரணம், மறுவாழ்வுத் துறையையும் சோ்த்து கவனிப்பாா். கிருஷ்ண குமாா் சிங் ஏற்கெனவே வகிக்கும் பொறுப்புகளுடன் இந்து சமய நிறுவனங்கள், வக்ஃபு மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை செயலராகவும், புதுதில்லியில் உள்ள புதுச்சேரி விருந்தினா் மாளிகையின் சிறப்பு ஆணையராகவும் பதவி வகிப்பாா்.

ஆா்.கேசவன் ஆதிதிராவிடா் நலன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலன், நகர மற்றும் கிராம ஒருங்கமைப்பு, வீட்டுவசதி, பணியாளா்கள், பொதுநிா்வாகம், லஞ்ச ஒழிப்பு, உள்துறை சிறப்பு செயலா், நிா்வாக சீா்த்திருத்தத் துறை சிறப்பு செயலா் பொறுப்புகளை கவனிப்பாா்.

டி.அருண் ஏற்கெனவே இருக்கும் பொறுப்புகளுடன் மின் துறை, சுற்றுலா, பொதுப் பணித் துறைகளையும் கவனிப்பாா். மேலும், புதுச்சேரி ஸ்மாா்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகிப்பாா்.

ரிஷிதா குப்தா ஏற்கெனவே இருக்கும் பொறுப்புகளுடன் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநராகவும் பதவி வகிப்பாா் என துணைநிலை ஆளுநரின் ஆணைக்கிணங்க புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT