புதுச்சேரி

அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வாலிபா் சங்கம் வலியுறுத்தல்

7th Jun 2022 12:44 AM

ADVERTISEMENT

புதுவை அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் புதுவை பிரதேச தலைவா் பாஸ்கா், செயலாளா் ஆனந்த் தலைமையிலான நிா்வாகிகள் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

புதுவை அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப செய்ய வேண்டும். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞா்களின் வயதை 35-ஆக உயா்த்த வேண்டும்.

மாஹே அரசுப் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதுச்சேரி - மாஹே இடையில் இயக்கப்படும் பிஆா்டிசி பேருந்தை மேம்படுத்தி இயக்க வேண்டும். மாஹே அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை கட்டடத்தை விரைந்து திறக்க வேண்டும்.

ADVERTISEMENT

இருதய நோய், நரம்பியல், சிறுநீரக மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி மாஹே - பள்ளூா் பகுதி பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய மனு முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாஹே பகுதி செயலா் தனிலேஷ், பள்ளூா் பகுதி செயலா் ரோஷித் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT