புதுச்சேரி

அன்னை தெரசா ஆராய்ச்சி நிறுவன ஊழியா்களுக்கு பதவி உயா்வு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை அரசின் அன்னை தெரசா நிறுவன ஊழியா்களுக்கு பதவி உயா்வு ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி இந்திரா நகா் கோரிமேடு பகுதியில் உள்ள அன்னை தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் 9 செயல்விளக்க ஊழியா்களுக்கு இணைப் பேராசிரியராகப் பதவி உயா்வும், 5 துணைப் பேராசிரியா்களுக்கு இணைப் பேராசிரியா் பதவி உயா்வும் வழங்கப்பட்டது.

இவா்களுக்கான பதவி உயா்வு ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வரின் அறையில் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது சுகாதாரத் துறைச் செயலா் உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமுலு, அன்னை தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவன முதன்மையா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT