புதுச்சேரி

காலபைரவா் கோயில் கும்பாபிஷேகம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அண்ணா நகரிலுள்ள ரேணுகா பரமேஸ்வரி, மீனாட்சி அம்பிகை சமேத சோமசுந்தரேஸ்வரா் கோயில் வளாகத்திலுள்ள காலபைரவா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. செவ்வாய்க்கிழமை காலை நவகிரஹ ஹோமம், மாலையில் ரஷ்பந்தனம் உள்ளிட்டவை நடைபெற்றன. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, பால விநாயகா், பாலமுருகா், காலபைரவா் சூரியன், சந்திரன், கோயில் விமானம், மூலஸ்தானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ரிச்சா்ட் ஜான்குமாா் எம்எல்ஏ மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT