புதுச்சேரி

சந்தானம் நடிக்கும் ’குலு குலு’: நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம்

28th Jul 2022 05:04 PM

ADVERTISEMENT

 

நடிகர் சந்தானம் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘குலு குலு’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி சந்தானம் தலைமை மன்றத்தின் சார்பில் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்தனர்.

புதுச்சேரி காந்தி சிலை பின்புறத்தில் பழைய துறைமுகத்தின் இரும்பு தூண்கள் உள்ளன. இதில்  அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், மற்றும் புதுப்படங்கள் வெளியானால் அவரது ரசிகர்கள் ஆபத்தை உணராமல் பேனர்கள் வைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகும் ’குலு குலு' திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

ADVERTISEMENT

ஆபத்தை உணரமால் இதுபோன்று ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை கொண்டாடும் வகையில் பேனர் வைப்பது வாடிக்கையாகிவிட்ட நிலையில் இன்று வைத்த பேனர் கடல் அலையால் சிறிது நேரத்திலேயே அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT