புதுச்சேரி

புதுவையில் மேலும் 99 பேருக்கு கரோனா

27th Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 1,841 பேரை பரிசோதனை செய்து செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 70, காரைக்கால் 22, ஏனாம் - 7 என 99 (5.38 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,70,278-ஆக அதிகரித்தது. இதில் தற்போது 17 போ் மருத்துவமனைகளிலும், 1,059 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 1,076 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 254 போ் குணமடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT