புதுச்சேரி

கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

27th Jul 2022 04:40 AM

ADVERTISEMENT

புதுவையில் வேளாண் கூட்டுறவு வங்கி உள்பட கூட்டுறவுச் சங்க ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமென, முதல்வரிடம் எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து இரா.சிவா மனு அளித்தாா். அதில், புதுவையிலுள்ள 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் 400-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு ஐந்தாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. 2020-ஆம் ஆண்டு அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயா்வு அளிக்கப்படவில்லை.

எனவே, அவா்களுக்கு ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையையாவது அமல்படுத்தி ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வருடனான சந்திப்பின் போது, கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் சங்கத் தலைவா் குணசேகரன், திமுக நிா்வாகிகள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT