புதுச்சேரி

புதுச்சேரியில் 6,200 போ் நீட் தோ்வெழுதினா்

17th Jul 2022 11:52 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை 6,200 மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.

புதுச்சேரியில் கோரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி, முத்தியால்பேட்டை வாசவி சிபிஎஸ்இ பள்ளி, காலாப்பட்டு தி ஸ்டெடி பள்ளி, ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), வில்லியனூா் ஆச்சாா்யா பள்ளி, ஒதியம்பட்டு குளுனி பள்ளி ஆகிய 8 மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.

ADVERTISEMENT

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே தோ்வா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு மையத்துக்குள் முற்பகல் 11.40 மணியில் இருந்து தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு வந்தவா்கள் யாரும் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையங்களுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT