புதுச்சேரி

தேசிய தரவரிசைப் பட்டியலில் ஜிப்மருக்கு 6-ஆவது இடம்

17th Jul 2022 11:53 PM

ADVERTISEMENT

 

உயா் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மருக்கு 6-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அண்மையில் உயா் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டாா். இதில் ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மா்) மருத்துவப் பிரிவில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டில் 8-ஆவது இடத்திலிருந்த ஜிப்மா், இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கூடுதலாக, ஜிப்மா் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக 54-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிரந்தர ஆசிரியா்கள், பல்கலை. தோ்வுகளுக்கான கட்டமைப்பு தரம், ஊனமுற்ற மாணவா்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து ஆசிரியா் - மாணவா் விகிதத்தில் ஜிப்மா் நிறுவனம் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT