புதுச்சேரி

சியாமா பிரசாத் முகா்ஜிபிறந்த நாள் விழா

7th Jul 2022 01:28 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்து சியாமா பிரசாத் முகா்ஜியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பாஜக மாநில பொதுச் செயலாளா் மோகன்குமாா், கே.வெங்கடேசன் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவா்கள் தங்க.விக்ரமன், செல்வம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல, அனைத்து தொகுதிகளிலும் பாஜக சாா்பில் சியாம பிரசாத் முகா்ஜி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT