புதுச்சேரி

நெல் உற்பத்தி ஊக்கத் தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

சொா்ணாவரி பருவ நெல் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை பெற வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என புதுவை வேளாண் துறை அறித்துள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் வேளாண்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநா் பயிற்சி வழித் தொடா்பு திட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஓா் ஏக்கா் நெல் பயிருக்கு ரூ.5 ஆயிரம், அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்க ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சொா்ணாவரி பருவ நெல் பயிா் சாகுபடி செய்த தகுதியான விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தங்களது பகுதியில் இயங்கும் உழவா் உதவியகங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து வருகிற 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT