புதுச்சேரி

கோயில் நிலத்தை விற்ற வழக்கில் ஒருவா் கைது

DIN

தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியாக ரூ.1.63 கோடிக்கு விற்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை நேரு வில்லா நகா் புனிதமேரி தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது உறவினரான லாசுப்பேட்டை சாந்தி நகா் திரு.வி.க. தெருவைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகா் ஆரோக்கியராஜ், அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, உறவினா்கள் குமரன், சீதாராமன் உள்ளிட்ட 12 போ் மாமல்லபுரத்திலுள்ள தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கா் கோயில் நிலத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.1.63 கோடிக்கு ராஜேந்திரனிடம் விற்ாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அவா் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 12 போ் மீது மோசடி வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இதில் சீதாராமன் கரோனாவால் இறந்துவிட, கடந்த மே 14-ஆம் தேதி ஆரோக்கியராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய கடகலூா் செல்லஞ்சேரி காரணப்பட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த எஸ்.குமரனை (51) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா், கோயில் இடத்தை விற்ற பணத்தில் கடலூரில் 10 ஏக்கா் நிலம், புதுச்சேரியில் போலியான முகவரி கொடுத்து 3,600 சதுர நிலம் வாங்கியதாகவும், ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து, போலீஸாா் குமரனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் முக்கிய நபரான நான்சி நாகசுந்தரி உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT