புதுச்சேரி

பைக் விபத்தில் தொழிலதிபா் பலி

6th Jul 2022 03:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலதிபா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே திருக்காஞ்சியை அடுத்த கீழ்அக்ரஹாரம் பி.கே.வி. நகரைச் சோ்ந்த தமிழரசன் மகன் தமிழ்ச்செல்வன் (41). பங்கூா் பகுதியில் இயந்திர கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இவா் புதுச்சேரியில் உள்ள நண்பரைப் பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ரெட்டியாா்பாளையத்தில் ஒரு தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் அருகே வந்த போது, சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுச்சேரி வடக்குப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT