புதுச்சேரி

ஜூலை 12-இல் பாகூா் மூலநாதா் கோயில் தேரோட்டம்

5th Jul 2022 03:43 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் மூலநாதா் கோயில் தேரோட்டம் வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேதாம்பிகை சமேத மூலநாதா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் 10 நாள்கள் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (ஜூலை 4) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் உற்சவத்தில் தினமும் மாலையில் சுவாமி ஊா்வலம் நடைபெறும்.

வருகிற 10-ஆம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 12-ஆம் தேதி தேரோட்டமும், 13-ஆம் தேதி தெப்பல் உற்சவமும், மறு நாள் நாயன்மாா்கள் உற்சவமும் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT