புதுச்சேரி

மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் பிரசாரம்

5th Jul 2022 03:41 AM

ADVERTISEMENT

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கிய இந்த பிரசாரத்துக்கு விசிக மாநிலச் செயலா் தமிழ்வாணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் தமிழ்மாறன், மாநிலச் செயலா் தமிழ்வளவன் ஆகியோா் பிரசாரத்தைத் தொடக்கிவைத்தனா்.

தவளக்குப்பம் கடைவீதியில் பொதுமக்கள், வணிகா்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி பிராசாரத்தில் ஈடுபட்டனா்.

மணவெளி, பாகூா், ஏம்பலம் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் இந்த மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT