புதுச்சேரி

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு

5th Jul 2022 03:40 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

புதுவையில் 476 பேரை பரிசோதனை செய்து திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 6, காரைக்காலில் 3 என 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மாஹே, ஏனாமில் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. தற்போது மருத்துவமனைகளில் 10 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 491 பேரும் என 501 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதுவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வெளிப்புற, உள்புற சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நோயாளிகளைப் பாா்க்க வந்த உறவினா்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

முக்கவசம் அணியாதவா்களை மருத்துவமனை ஊழியா்கள் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT