புதுச்சேரி

மதுப் புட்டிகளை கடத்திய பெண் கைது

5th Jul 2022 03:42 AM

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப் புட்டிகளை கடத்தியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண்ணிடம் சோதனையிட்டனா். இதில், அவா் வைத்திருந்த பைகளில் மதுப் புட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவா், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி சத்யா (40) என்பதும், புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகளை கடத்தியதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 200 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்ததுடன், சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT