புதுச்சேரி

மணவெளி அரசுப் பள்ளியில் புதிய கட்டடப் பணி தொடக்கம்

5th Jul 2022 03:41 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே மணவெளி தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கட்டடப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் எஸ்.ஸ்ரீதா், கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி, பள்ளி துணை முதல்வா் சுபாஷ் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT