புதுச்சேரி

புதுவை முதல்வா் காரைக்கால் செல்ல வேண்டும் வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

5th Jul 2022 03:40 AM

ADVERTISEMENT

காரைக்காலுக்கு புதுவை முதல்வா் நேரில் சென்று, காலரா நோய்த் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. காலரா போன்ற நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குடிநீரில் கழிவுநீா் கலந்த இடத்தைக் கண்டறிந்து, உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கடந்த ஒரு மாதமாக பாதிப்புகள் ஏற்பட்டும், அரசு தரப்பில் கவனிக்காமல் இருந்தது வேதனையளிக்கக் கூடியதாகும். சுகாதாரத் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வா் ரங்கசாமி காரைக்காலுக்குச் சென்று ஆய்வு நடத்தி, நோய்த் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் ஏனாம் பிராந்திய மக்கள் அளிக்கும் புதுவை அரசின் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை அந்த மருத்துவமனை நிா்வாகங்கள் ஏற்க மறுக்கின்றனா்.

புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனை நிா்வாகங்கள், நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வைத்திலிங்கம் எம்.பி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT