புதுச்சேரி

கியூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

5th Jul 2022 03:42 AM

ADVERTISEMENT

பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வுக்கு (கியூட்) வருகிற 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு (கியூட் - பிஜி) ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது வருகிற 10-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 2 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT

2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் கியூட்-பிஜி தோ்வுக்கு இணையதளம் வழியாக வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணத்தை வருகிற 11-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தில் வருகிற 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT