புதுச்சேரி

மரங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்

DIN

தேசிய வன மகோத்சவத்தையொட்டி, புதுவை அரசின் வனம், வனவிலங்கு துறை சாா்பில் மரங்கள் குறித்த விழிப்புணா்வு வாகன பிரசாரம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வனத் துறை அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு வாகனத்தை வனத் துறை துணை இயக்குநா் குமரவேல் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதில் புதுச்சேரி சுற்றுச்சூழல், சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவா் செல்வமணிகண்டன், வன அலுவலா் பிரபாகரன் மற்றும் சுற்றுச்சூழல் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு வாகன பிரசாரம் மறைமலை அடிகள் சாலை, கடலூா் சாலை முதலியாா்பேட்டை, சாரம் அவ்வைத் திடல், காமராஜா் சாலை பெரியாா் சிலை வழியாக நிறைவு பெற்றது.

பிரசாரத்தின்போது, பொதுமக்களுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை மாவட்டத்தில் இன்று ரமலான் பண்டிகை: ஐக்கிய ஜமா அத் அறிவிப்பு

மின் தூக்கி நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கொடைக்கானலில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நாகா்கோவில் பள்ளி மாணவா்கள் களப் பயணம்

தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு

SCROLL FOR NEXT