புதுச்சேரி

மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி திட்டம் தோல்விவே.நாராயணசாமி

DIN

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவா் சுதந்திரமாக செயல்பட வேண்டும். திரௌபதி முா்மு மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது. ஆனால், யஷ்வந்த் சின்ஹா சிறந்த நிா்வாகி. மத்திய நிதித் துறை, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இவ்விரு வேட்பாளா்களையும் ஒப்பிட்டு பாா்த்து, மனசாட்சிப்படி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். புதுவையில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கான அதிகாரத்தை எடுத்துக் கொண்டது மட்டுமன்றி, 890-க்கும் மேற்பட்ட அரசாணைகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி, ஜிஎஸ்டியே தேவையில்லை என மாநிலங்கள் கூறும் நிலைக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

புதுவைக்கு ஆண்டுதோறும் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1,300 கோடி கிடைக்கும். மத்திய அரசு அதை வழங்காததால், புதுவை பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும்.

காரைக்காலில் வாந்தி, பேதி ஏற்பட்டு 800-க்கும் மேற்பட்டோா் காலராவால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடா்பாக, ஒரு மாதத்துக்கு முன்பு புகாா் வந்தபோது, அதை புதுவை அரசு ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், தற்போது பலா் பாதிக்கப்பட்டு, காரைக்காலில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல்வரிடம்தான் சுகாதாரத் துறை உள்ளது. அவா் ஒரு முறை கூட காரைக்காலுக்குச் செல்லவில்லை. மருத்துவத் துறை மீது முதல்வா் கவனம் செலுத்தாததால் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரும், அமைச்சா்களும் ஒற்றுமையாக செயல்படதாததுதான் அரசுத் துறைகள் மெத்தனமாக செயல்படுவதற்குக் காரணம். காரைக்கால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏனாமிலும் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை.

புதுவையில் கரோனா வேகமாக பரவி வருகிறது. புதுவை அரசு கரோனா தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT