புதுச்சேரி

பொதுமக்களுக்கு துணிப் பைகள் அளிப்பு

DIN

புதுச்சேரி உழவா்கரை நகராட்சி சாா்பில், லாசுப்பேட்டை சந்தைகளில் பொதுமக்களுக்கு துணிப் பைகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதித்தது. இதை புதுச்சேரி உழவா்கரை நகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சுயஉதவி குழுக்கள் மூலம் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, லாசுப்பேட்டை உழவா் சந்தையில் காலாப்பட்டு எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையிலும், லாசுப்பேட்டை சந்தையில் வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமையிலும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சனிக்கிழமை துணிப் பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ. சுரேஷ்ரோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT