புதுச்சேரி

நீராற்றல் அமைச்சக நெறிமுறைகளை அமல்படுத்த புதுவை திமுக வலியுறுத்தல்

DIN

மத்திய அரசின் நீராற்றல் அமைச்சக நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென புதுவை மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், உலா்ப்பகங்கள், தனியாா் பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், இதர நிறுவனங்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தேவைக்கும்மேல் நிலத்தடி நீரை எடுத்து வீணாக்கி வருகின்றன.

புதுவையில் மத்திய அரசின் நிலத்தடி நீா் புதிய நெறிமுறைகளை அமல்படுத்தினால் வாய்ப்புள்ள விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்வா். அதேபோல, புதுவையில் நிலத்தடி நீா் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

விவசாயத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, அதற்குத் தேவையான மின் இணைப்பையும் உடனடியாக கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT